தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.கே.எம்.வி. பல்கலைக்கு பாரம்பரிய அந்தஸ்து?

ஆர்.கே.எம்.வி. பல்கலைக்கு பாரம்பரிய அந்தஸ்து?

ஆர்.கே.எம்.வி. பல்கலைக்கு பாரம்பரிய அந்தஸ்து?


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொல்கத்தா: ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கு(), ஹெரிடேஜ் அந்தஸ்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்திலுள்ள இப்பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி இதை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையில், விவேகானந்தரின் கருத்துக்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்படும். அந்த புதிய கொள்கையை உருவாக்குவதற்கு, முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைகளை இந்த அரசு எதிர்பார்க்கிறது.

புதிய கல்விக் கொள்கையானது, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டிற்கான சிறந்த மனித வளத்தை உருவாக்குவதில் அக்கறை செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலை, ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. இதற்கு, நாடு முழுவதும், பேளூர், கோயம்புத்தூர், ராஞ்சி மற்றும் நரேந்திரப்பூர் ஆகிய இடங்களில் சேர்த்து மொத்தம் 4 வளாகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us