நாகர்கோவிலில் நாணயக் கண்காட்சி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது
நாகர்கோவிலில் நாணயக் கண்காட்சி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது
UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 11:25 AM
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மூன்று நாள் நாணயம் மற்றும் தபால்தலை கண்காட்சி தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்ட தபால்தலை மற்றும் நாணயம் சேகரிப்போர் சங்கத்தின் 36-வது ஆண்டு விழாவையொட்டி அஞ்சல் துறையுடன் இணைந்து நாகர்கோவிலில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். பத்மனாபன் திறந்து வைத்தார். நாகர்கோவில் போஸ்ட் மாஸ்டர் கண்ணபிரான், முதுநிலை கண்காணிப்பாளர் செல்வாஜ், சங்க தலைவர் கனி, செயலாளர் தயாஸ் ஜேக்கப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் மன்னர் கால நாணயங்கள், ஆங்கிலேயர் கால நாணயங்கள், இந்திய அரசு வெளியிட்ட விழாக்கால நாணயங்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாணயங்கள், நூற்றுக்கணக்கான தபால் தலைகள் இடம் பெற்றிருந்தது.
வரும் 13-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
