பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பள்ளிக் குழந்தைகள் பலி
பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பள்ளிக் குழந்தைகள் பலி
UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 11:27 AM
பீஜிங்: சீனாவில் நேற்று நிகழ்ந்த பயங்கர விபத்தில் எட்டு பள்ளிக் குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்தனர்.
ஏழு பேர் மட்டுமே அமரக் கூடிய மினி வேனில் பள்ளிக் குழந்தைகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தபோது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் இந்த சோகம் நிகழ்ந்தது. விபத்தில் இறந்த குழந்தைகள் அனைவரும் கிண்டர்கார்டன் எனப்படும் ஒன்றாம் வகுப்புக்கு கீழ் படித்த மாணவர்கள். இறந்தவர்களில் ஆசிரியைகள் மற்றும் டிரைவர் அடக்கம்.
இந்த மாத துவக்கத்திலும் இதுபோல் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 22 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த அனைத்து குழந்தைகளும் இறந்தன. இதற்கு போலீசாரின் கவனக்குறைவு தான் காரணம் என தெரிவித்து போலீசார் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் விபத்தில் குழந்தைகள் பலி தொடர்கிறது.
