புதுச்சேரி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை: கலந்தாய்வு இன்று துவக்கம்
புதுச்சேரி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை: கலந்தாய்வு இன்று துவக்கம்
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 11:58 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று (14ம் தேதி) துவங்குகிறது.
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்டாக் மூலம் நிரப்பபட்டு வருகிறது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. அதையடுத்து பொறியியல் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.
காலை 9௦௦ மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கும், மதியம் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கான பி.பார்ம். சிறப்பு கவுன்சிலிங் நடக்கிறது. 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை (20ம் தேதியை தவிர்த்து) 7 நாட்கள் பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
நாளை 15ம் தேதி துவங்கும் அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வில் கட்-ஆப் மதிப்பெண் 200 முதல் 180.667 வரையிலும், 16ம் தேதியில் 180.333 முதல் 164.333 வரையில் கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அரசு கல்லூரிக்கு புதுச்சேரியில் 650 மற்றும் காரைக்காலில் 150 இடங்கள் இன்றைய கவுன்சிலிங்கில் நிறப்பட உள்ளன.
திறக்கப்பட உள்ள அவ்வையார் பொறியியல் கல்லூரி உட்பட மொத்தமுள்ள 14 தனியார் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. 4 ஆயிரம் இடங்களுக்கு பொறியியல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

