sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தைகளை தொட பிறரை அனுமதிக்காதீர்: விழிப்புணர்வு பயிற்சியில் விளக்கம்

/

குழந்தைகளை தொட பிறரை அனுமதிக்காதீர்: விழிப்புணர்வு பயிற்சியில் விளக்கம்

குழந்தைகளை தொட பிறரை அனுமதிக்காதீர்: விழிப்புணர்வு பயிற்சியில் விளக்கம்

குழந்தைகளை தொட பிறரை அனுமதிக்காதீர்: விழிப்புணர்வு பயிற்சியில் விளக்கம்


UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM

ADDED : ஜூலை 14, 2014 12:00 PM

Google News

UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM ADDED : ஜூலை 14, 2014 12:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: மத்திய தொழிலாளர் கல்வி வாரியம், கோவை மண்டலம் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் கடந்த இரு நாட்களாக நம்பியூரில் நடக்கிறது.

 சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சென்னி பெசவம்மா தலைமை வகித்தார். மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் கோவை மண்டல கல்வி அதிகாரி கிரிஜா சிவகாமி பேசியதாவது:

பாலியல் வன்முறை என்பது இன்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கு கூட நடக்கிறது. இந்தியா மக்கள் தொகை 130 கோடியில் 65 கோடி பேர் பெண்கள். பெண்கள்,தன்னம்பிக்கை, சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும்.

இன்று பாலியல் வன்முறை என்பது வயது வித்தியாசமின்றி நடக்கிறது. பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் தான் முன்னேறி வருகின்றனர்.

உடலை தொடும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளை யார் தொட்டாலும் அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். நமக்கு கற்றுத்தர தயக்கமாக இருந்தால் அத்தை, சித்தி அல்லது யார் கூறினால் அக்குழந்தை கற்றுக்கொள்ளும் என்பதை உணர்ந்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

நம்பியூர் டவுன் பஞ். தலைவர் கமலம் நம்பிமணி தலைமை வகித்தார். ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் புஷ்பா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us