UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 12:28 PM
தஞ்சாவூர்: வரும் 16ம் தேதி முதல் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு, தனியார் ஐ.டி.ஐ. களில் கலந்தாய்வு துவங்குகிறது என தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி முதல்வர் தனவேந்தன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை மற்றும் திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 18 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான பொது கலந்தாய்வு வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.
இதில் சிறப்பு இனங்கள் மற்றும் மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு வரும் நாளை சிறப்பு கலந்தாய்வு நடக்கும். எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வில் 96 முதல் 65.5 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 16ம்தேதி 65 முதல் 56.5 சதவீதம் வரை, 17ம் தேதி 56 சதவீதம் முதல் 51 சதவீதம் வரை, 18ம் தேதியும் கவுன்சலிங் நடக்கும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 97.5 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு 19ம் தேதியும், 51.5 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை 20ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
விண்ணப்பித்து அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மேற்கண்ட நாட்களில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். கலந்தாய்வில் ஏற்படும் காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

