UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 12:35 PM
தேனி: தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தணிக்கையாளர் (ஆடிட்டர்) கல்வி விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
துணை முதல்வர் சுசிலா சங்கர் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். இணை செயலாளர் ராஜமோகன் முன்னிலை வகித்தார். முதல்வர் சித்ரா உட்பட பலர் பேசினார்.
தணிக்கையாளர் ஜெகதீசன் பங்கேற்று தணிக்கையாளர் கல்வியின் முக்கியத்துவத்தும் குறித்து பேசியதாவது: பிளஸ் 2 முடித்தவுடன் சி.பி.டி எனும் சி.ஏ. பவுண்டேசன் கோர்ஸ் படிக்கலாம். இது முடிந்தவுடன் ஓராண்டு தணிக்கை அலுவலகத்தில் பயிற்சி பெற வேண்டும். பயிற்சி முடித்தவுடன் மாணவிகள் சி.ஏ. இன்டர் இரண்டு பகுதிகளாக படிக்க வேண்டும்.
முதல் பகுதியில் நான்கு பாடங்களையும், இரண்டாம் பகுதியில் மூன்று பாடங்களையும் படிக்க வேண்டும். சி.ஏ. இன்டர் தேர்வு முடிந்தவுடன் தணிக்கையாளராகலாம். தொழிற்சாலைகளிலும் வேலை பார்க்கலாம் என்றார். வணிகவியல் பேராசிரியர் பூரணம் நன்றி கூறினார்.

