தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் குறை தீர்க்க தனி இணையதளம்: யு.ஜி.சி. அறிவிப்பு

மாணவர்கள் குறை தீர்க்க தனி இணையதளம்: யு.ஜி.சி. அறிவிப்பு

மாணவர்கள் குறை தீர்க்க தனி இணையதளம்: யு.ஜி.சி. அறிவிப்பு


UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM

ADDED : ஜூலை 16, 2014 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM ADDED : ஜூலை 16, 2014 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், சேர்க்கையின் போதே பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். சில நேரங்களில் கல்லூரியில் சேர்ந்த பின் கல்லூரியின் அங்கீகாரம், அனுமதி உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை போக்க யு.ஜி.சி. புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி ஆன்-லைன் மாணவர்கள் குறை தீர்ப்பு இணையம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் இதில் தங்கள் குறைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட கல்லூரி அல்லது பல்கலை அந்த குறைகளை நிவர்த்தி செய்யும். குறிப்பிட்ட பல்கலை அல்லது கல்லூரி மற்றும் யு.ஜி.சி. ஆகியவை மாணவர்களின் உண்மையான தேவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் குறைந்த காலத்தில் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன், கல்வி நிறுவனங்கள் புதிய கொள்கை முடிவுகளை எடுக்கவும் வசதியாக இருக்கும் என யு.ஜி.சி. தெரிவித்து உள்ளது. பல்கலைகளில் இதற்கான தனி அதிகாரியை நியமிக்க யு.ஜி.சி. உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த அதிகாரி பல்கலையின் கீழ் வரும் கல்லூரிகளில் இருந்து வரும் புகார்களையும் கவனிப்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us