தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: மாவட்டத்தில் கல்வி, விளையாட்டு துறை செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் நடந்தது.

சி.இ.ஓ., மார்ஸ் தலைமை தாங்கினார். திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலவச கல்வி உபகரணங்கள் குறித்து ஆய்வு நடந்தது. மாவட்ட கல்வித் துறை விவரங்களை இன்டர்நெட்டில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வெப்சைட்டை துவக்கி வைத்து தகவல்களை பெறுவது குறித்து புரொஜக்டர் மூலம் விளக்கினர்.

மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறும் பயிற்சிகளை அளிப்பது தொடர்பாகவும், வ ருடாந்திர செயல் திட்டம் குறித்தும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடந்தது.

பள்ளி துணை ஆய்வர் ராமகிருஷ்ணன், திண்டிவனம், செஞ்சி, வானூர், திருக்கோவிலூர் வட்டங்களின் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us