தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்!

மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்!

மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டங்கள்!


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

கொட்டாம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை வகித்தார். தமிழாசிரியை சுவந்திராதேவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் தவமணி நன்றி கூறினார். ஆசிரியர் ராமசாமி வழிகாட்டுதலில் செஸ் விளையாட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

* விக்கிரமங்கலம் நகர் காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் விஜயபிரபாகரன் தலைமையில் நடந்தது. செயலாளர் விஸ்வநாதன், வட்டார தலைவர் செல்லப்பா வரவேற்றனர். துணைத்தலைவர் மகாராஜன் பங்கேற்றனர்.

* சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலில் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், செயலாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் சுப்பையா, பொன்னுச்சாமி, மகளிரணி சுமதி, முருகேஸ்வரி பங்கேற்றனர்.

* மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் ஜெகந்நாத் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஞானசந்திரன் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர் சங்கரன் முன்னிலை வகித்தார். உறுப்பினர் சங்கரன், ராதாகிருஷ்ணன், சாந்தாராம், உதவி தலைமையாசிரியர் கணேஷ்பாபு மற்றும் பலர் பங்கேற்றனர்.

* எர்ரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஹரிஹரன், அனுராதா, முகமது பாரூக் ஏற்பாடு செய்தனர்.

* தல்லாகுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப் பள்ளி, பட்டுப்பூச்சி இருளாண்டி முதலியார் ஆரம்பபள்ளி சார்பில் நடந்த விழாவில், செங்குந்தர் கல்வி மன்ற செயலாளர் அதியமான் செண்பகம் தலைமை வகித்தார். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கீதா வரவேற்றார். ஆரம்ப பள்ளி தாளாளர் பிரகாஷ், உயர்நிலை பள்ளி தாளாளர் நாகமணி பேசினர். வக்கீல் சங்கரலிங்கம், ஆனந்தன், அரசு விடுதி காப்பாளர் ஜான் மற்றும் பலர் பங்கேற்றனர்.

* மதுரையில் தியாகதீபம் பேரவை சார்பில் நடந்த விழாவில் சரவண செல்வம் எழுதிய கிங்மேக்கர் நுாலை, கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் வெளியிட்டார். பேரவை தலைவர் பாலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஹரிஹரன், சீனிவாசன், முருகேசன், ரங்கசாமி, சேவியர், தர்மகுமார் பங்கேற்றனர்.

* மதுரை காமராஜ் பல்கலையில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் கல்யாணி தலைமை வகித்தார். பதிவாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நல்லகாமன், தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன், சிண்டிகேட் உறுப்பினர்கள் குமரேசன், வித்யா, மக்கள் தொடர்பு அலுவலர் அறிவழகன் பங்கேற்றனர்.

* கீழ வெளி வீதி காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். விளக்குத்துாண் சிலைக்கு முத்துச்சாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மன்ற ஆலோசகர்கள் சிவபாலன், மாரியப்பன், சிதம்பரம், முருகேசன் பங்கேற்றனர்.

* சாத்தங்குடி சத்திரிய நாடார் உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். தலைவர் நடராஜன், தொழிலதிபர் தமிழ்குமார் பேசினர். போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழன் பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் காசிராஜன் ஏற்பாடுகளை செய்தார்.

* எஸ்.எஸ்.காலனி கிரேஸ் பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவில் காமராஜரின் உதவியாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார். சேர்மன் ராமநாதன், தாளாளர் செல்லத்துரை பங்கேற்றனர்.

* கீழவாசல் ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கலை மன்றம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் முத்தரசு தலைமை வகித்தார். தாளாளர் சரோஜா முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகி பாலு, மன்ற நிர்வாகி சந்திரகுமார் பேசினர். இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

* கருப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமையாசிரியை பிரேமாதேவி, தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை ஜேன்திலகவதி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, முருகன், இந்திரா, ஹேமலதா, ஜோதிமுத்து விழாவிற்கான ஏற்பாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us