தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள் ஸ்டிரைக்

அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள் ஸ்டிரைக்

அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள் ஸ்டிரைக்


UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM

ADDED : ஜூலை 18, 2014 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM ADDED : ஜூலை 18, 2014 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர்கள், முதல்வரை மாற்றக்கோரி, செட்டிநாட்டிலிருந்து - காரைக்குடி வரை 18 கி.மீ., நடந்து வந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் அரசு உதவிபெறும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியின் தற்போதைய முதல்வரை மாற்ற வேண்டும், மாணவர்களை பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு, மூன்றாமாண்டு மாணவர்கள், கடந்த ஜூன் 18, 30-ம் தேதி கல்லுாரி முன்பு ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

போலீசில் புகார்: இருமுறை நடந்த ஸ்டிரைக்கின் போதும், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி மீண்டும் கல்லுாரி திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், கல்லுாரி முதல்வரை மாற்ற வேண்டும் என கோரி, மாணவர்கள் செட்டிநாடு போலீசில் புகார் செய்துள்ளனர்.

கல்லுாரி முன் மறியல்: இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு கல்லுாரிக்கு வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி நுழைவு வாயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால், காரைக்குடியிலிருந்து வந்த பஸ்கள் கொத்தரி வழியாகவும், திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு வரும் பஸ்கள், கானாடுகாத்தான் நான்கு ரோட்டிலும் பிரித்து விடப்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள் காலை 10 மணியளவில் செட்டிநாட்டிலிருந்து - காரைக்குடி வரை 18 கி.மீ., நடந்து வந்து, புதிய பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயிலில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை எச்சரித்து, ஓரமாக நிற்கும்படி கூறினர். இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது.

பழி வாங்க மாட்டோம்

முதல்வர் சுந்தர்ராஜன் கூறும்போது: மாணவர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது, கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களை, எந்த விதத்திலும் பழி வாங்க மாட்டோம் என்பதை கல்லுாரி தரப்பில் ஏற்கனவே கூறியுள்ளோம். அந்த பயத்தில் யாரும் இருக்க வேண்டாம். அவர்கள் படிப்பு பாழாக கூடாது என்பதற்காக, வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றார்.

பேச்சுவார்த்தை: மாணவர்கள் நடந்து வரும்போது, பேச்சுவார்த்தை நடத்த, காரைக்குடி தாசில்தார் இளங்கோ பல முறை முயன்றும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை. கலெக்டரிடம் மனு கொடுத்தே பலன் இல்லை, தாசில்தாரிடம் கொடுத்து என்ன பலன் என மறுத்தனர். இறுதியில் மாலை 3.30 மணிக்கு, துணை தாசில்தார் சிதம்பரம், தாசில்தார் இளங்கோ பேச்சுவார்த்தை நடத்தினர். டி.எஸ்.பி.,முருகேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us