தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியும் பயனற்ற நிலை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியும் பயனற்ற நிலை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியும் பயனற்ற நிலை


UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM

ADDED : ஜூலை 18, 2014 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM ADDED : ஜூலை 18, 2014 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: செவிலிமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டியும், கதவு அமைக்காததால் பயனற்ற நிலையில் உள்ளது.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 253 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்பது ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த காலங்களில் இப்பள்ளி திறந்தவெளியாக இருந்ததால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டியும் அசுத்தம் செய்து வந்தனர்.

பெற்றோர் - ஆசிரியர் கழகம், மாணவர்களின் பெற்றோர், பகுதிவாசிகள் போராடி சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்தனர். இதன் காரணமாக, இந்த பள்ளிக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், 4,48,000 ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. குறைவான நிதியால், சுற்றுச்சுவர் பாதியில் நின்றுபோனது. முழுமை பெறவில்லை.

மேலும், கதவும் அமைக்கப்படவில்லை. இதனால், சுற்றுச்சுவர் கட்டியும் பலனில்லாமல் போனது. பள்ளி வளாகத்தில் அசுத்தங்கள் செய்வது தொடர்கிறது. வளாகத்தில் மரக்கன்று நட்டதை பிடுங்கி விடுகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "சுற்றுச்சுவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். கதவு அமைக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரத்தில் குடி மையமாகவும், இயற்கை உபாதை கழிப்பதால் சுகாதாரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us