தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ஆராய்ச்சிக்கு குறைந்த தொகை ஒதுக்கும் இந்தியா: அறிக்கை

அறிவியல் ஆராய்ச்சிக்கு குறைந்த தொகை ஒதுக்கும் இந்தியா: அறிக்கை

அறிவியல் ஆராய்ச்சிக்கு குறைந்த தொகை ஒதுக்கும் இந்தியா: அறிக்கை


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில், அண்டை நாடான சீனா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

The Observer Research Foundation என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.88% மட்டுமே, அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்குகிறது.

இதன்மூலம், அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகவும் குறைந்தளவு நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுகிறது.
ஆனால், அமெரிக்காவில் 7% முதல் 8% வரையும், தென்கொரியாவில் 3% முதல் 4% வரையும் ஒதுக்கப்படுகின்றன.

இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு(R&D) துறை முதலீட்டில், கால் பங்கிற்கும் அதிகமாக, அடிப்படை ஆராய்ச்சிக்கு செல்கிறது. சீனாவில் 5% மற்றும் அமெரிக்காவில் 17% அடிப்படை ஆராய்ச்சிக்கு செல்கின்றன.

இந்தியாவின் இந்த நிலைக்கு, கல்வி அமைப்பும் குற்றம் சாட்டப்படுகிறது. பட்டம் வாங்குவதற்கும், மதிப்பெண் வாங்குவதற்குமே முக்கியத்துவம் தரும் கல்வியால், ஆராய்ச்சி மனநிலை பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, பல விஷயங்கள் அந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us