விளையாட்டு விடுதியில் பயிற்சியாளர் இல்லை: அமைச்சரிடம் மாணவர்கள் புகார்
விளையாட்டு விடுதியில் பயிற்சியாளர் இல்லை: அமைச்சரிடம் மாணவர்கள் புகார்
UPDATED : ஜூலை 21, 2014 12:00 AM
ADDED : ஜூலை 21, 2014 12:02 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் தடகள பயிற்சியாளர் இன்றி பயிற்சி பெறுவதில் சிரமம் இருப்பதாக அமைச்சர் சுந்தர்ராஜனிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
காரைக்குடியில் நடந்த மினிமாரத்தான் போட்டியில் சிவகங்கை விளையாட்டு விடுதி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய அமைச்சர் உங்கள் பயிற்சியாளர் வந்துள்ளாரா என்றார். எங்களுக்கு பயிற்சியாளர் இல்லை என்றனர். உடனே விளையாட்டு விடுதி அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டார்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, விளையாட்டு விடுதியில் 52 பேர் படிக்கிறோம். எங்களுக்கு பயிற்சியாளர் இல்லை. பல போட்டிகளில் உரிய பயிற்சியின்றி பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றனர்.
