UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 01:51 PM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் - அஸ்தம்பட்டி ரோட்டில் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இங்குள்ள மாணவ மாணவியருக்கு அடிப்படை வசதி எதுவும் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பலமுறை, கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் மனு அளித்து வந்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் மாணவி ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதை கண்டித்தும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
