தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவித் தொகை குறைப்பால் மாணவர்கள் சிரமம்

உதவித் தொகை குறைப்பால் மாணவர்கள் சிரமம்

உதவித் தொகை குறைப்பால் மாணவர்கள் சிரமம்


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் 10 இடங்களை பெற்ற (மாவட்டம் தோறும்) டாப் 10 மாணவர்களை தேர்வு செய்து, அவர்கள் விரும்பும் பள்ளியில் பிளஸ்1, பிளஸ் 2 படிக்க ஒவ்வொரு மாணவருக்கும் ஆதி திராவிட நலத்துறை சார்பில் ஆண்டுக்கு தலா ரூ. 28 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

தற்போது இந்த தொகை குறைக்கப்பட்டு ரூ. 20 ஆயிரமாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர்கள், கூடுதல் தொகையை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உதவி தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆதி திராவிட நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஆதி திராவிட மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பள்ளியில் மேல் படிப்பு படிக்க ரூ. 4,500 முதல் ரூ. 28 ஆயிரம் வரை கல்வி கட்டணம் செலுத்தி வருகிறோம். கூடுதலாக கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us