தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்சி தேசிய சட்டப்பள்ளியில் டில்லி பேராசிரியர்கள் சிறப்பு பயிற்சி

திருச்சி தேசிய சட்டப்பள்ளியில் டில்லி பேராசிரியர்கள் சிறப்பு பயிற்சி

திருச்சி தேசிய சட்டப்பள்ளியில் டில்லி பேராசிரியர்கள் சிறப்பு பயிற்சி


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி - திண்டுக்கல் ரோட்டிலுள்ள நவல்குட்டப்பட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியை கடந்தாண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதையடுத்து பி.ஏ., எல்.எல்.பி. மற்றும் பி.காம்., எல்.எல்.பி. ஆகிய பாடப்பிரிவுகளில் வெளிநாட்டினர் 10 பேர், வெளி மாநிலத்தவர் 45 பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 45 பேர் என 100 மாணவ மாணவியர் முதலாமாண்டில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த மாதம் ஸ்ரீரங்கத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைக்க வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நடப்பாண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் 200 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் நடப்பாண்டு முதலாமாண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த 15ம் தேதி துவங்கியது. முதற்கட்டமாக வெளிநாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கான கவுன்சலிங் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இரண்டாம் ஆண்டு வகுப்பு துவங்கியது.

இதையொட்டி டில்லி தேசிய சட்டப்பள்ளியில் இருந்து பேராசிரியர்கள் சச்சிதானந்தம் (கான்ஸ்டியூசன்), அமர்சிங் ( சிறப்பு சட்டங்கள்), ராதா (பொருளாதாரம்) மற்றும் அஞ்சு தியாஜ் (குடும்பநல சட்டங்கள்) பேராசிரியர்கள் பத்து நாள் சிறப்பு வகுப்பு எடுக்க வந்துள்ளனர்.

அவர்களை தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் துணைவேந்தர் முருகவேல் வரவேற்று சிறப்பு பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார். சட்டபள்ளி பதிவாளர் சவுந்திரபாண்டியன் உடனிருந்தார்.

"டில்லி, தேசிய சட்டப்பள்ளி பேராசிரியர்களை தொடர்ந்து வெளிநாட்டு சட்டபல்கலை பேராசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும்" என துணைவேந்தர் முருகவேல் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us