விவசாயக் கல்லூரி பி.எஸ்சி., முதலாண்டு வகுப்புகள் ஜூலை 30ல் துவக்கம்
விவசாயக் கல்லூரி பி.எஸ்சி., முதலாண்டு வகுப்புகள் ஜூலை 30ல் துவக்கம்
UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM
ADDED : ஜூலை 25, 2014 11:46 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 30ல் துவங்குகின்றன.
கல்லூரி பதிவேட்டில் கையெழுத்து வேண்டியிருப்பதால், மாணவர்களுடன், பெற்றோரும் வரவேண்டும். ஜூலை 30ல் கல்லூரி வருவதற்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் சர்ச் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இருந்து காலை 8.45 மணிக்கு பஸ் கிளம்பும்.
அங்கிருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரில் நிறுத்தப்படும். மற்றொரு பஸ், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்தப்பட்டு மாணவர், பெற்றோர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என டீன் சின்னுசாமி தெரிவித்துள்ளார்.
