தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு வேலைக்கு ஏங்கும் 2.5 அடி உயர பி.காம். படித்த ஏழை பட்டதாரி மாணவி!

அரசு வேலைக்கு ஏங்கும் 2.5 அடி உயர பி.காம். படித்த ஏழை பட்டதாரி மாணவி!

அரசு வேலைக்கு ஏங்கும் 2.5 அடி உயர பி.காம். படித்த ஏழை பட்டதாரி மாணவி!


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 12:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: "அரசு வேலையே என் குறிக்கோள்" எனக்கூறும் மேட்டூரை சேர்ந்த, பி.காம்., பட்டத்தாரியான, இரண்டரை அடி உயர மாணவி, தனக்கு வேலைவாய்ப்பு வழங்ககோரி, மேட்டூர் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தார்.

மேட்டூர், கட்டபொம்மன்நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி தர்மன்-அலமேலு மகள் பூங்கொடி, 22. ஹார்மோன் குறைபாடுகளால், இரண்டரை அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார். மேட்டூர் பெரியார் பல்கலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.காம்., படித்துள்ளார்.

மாற்று திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், எப்படியேனும் வேலையை பெறுவது என்ற குறிக்கோளுடன் பூங்கொடி உள்ளார். பட்டப்படிப்பு முடித்து அரசு வேலைக்காக தீவிர முயற்சி செய்யும் இரண்டரை அடி உயர மாணவி பூங்கொடியின் தன்னம்பிக்கை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பூங்கொடி தனக்கு அரசு வேலை கிடைக்க உதவி செய்யும்படி, நேற்று மேட்டூர் நகராட்சி தலைவர் லலிதாவிடம் மனு கொடுத்தார். பின்னர் பூங்கொடி கூறியதாவது: சிறுவயதில் பெற்றோர் என்னை அங்கன்வாடி பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றனர். அங்கிருந்தவர்கள் என்னை பார்த்தவுடன், கையால், காதை தொட்டால் மட்டுமே சேர்த்து கொள்வோம் என, கூறினர்.

அப்போது என்னால் காதை தொட முடியாததால் அங்கன்வாடியில் சேர்க்கவில்லை. எப்படியேனும் மற்றவர்களோடு சேர்ந்து பள்ளியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேட்டூர் செயின்ட்மேரீஸ் பள்ளியில் சேர்த்து படித்தேன். ப்ளஸ் 2 தேர்வில், 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

பின்னர், மேட்டூர் பெரியார் பல்கலை அரசு கல்லூரியில் பி.காம்., படித்து பட்டம் பெற்றுள்ளேன். அரசு பணியில் சேர வேண்டும் என்பதே என் குறிக்கோள். அதற்காக தீவிர முயற்சி செய்கிறேன். வேலை கிடைத்து விட்டால், என்னையும், குடும்பத்தையும் காப்பாற்றுவேன். திருமணம் செய்யும் எண்ணம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us