தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணி: கலந்தாய்வு துவக்கம்

பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணி: கலந்தாய்வு துவக்கம்

பள்ளிக் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணி: கலந்தாய்வு துவக்கம்


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான மாவட்ட கவுன்சிலிங், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

மாவட்டம் முழுவதும் உள்ள 34 பணியிடங்களுக்கு 83 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவரைத் தவிர மற்ற 82 பேர் பங்கேற்றனர். அதில் முன்னுரிமை அடிப்படையில் முதல் 34 பேர் தங்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்தனர்.

மற்றவர்களுக்கு இன்று (ஜூலை 26) காலை நடக்கும் வெளிமாவட்டங்களுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து கொள்வர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்தவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us