தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு பிரச்சார பயணம்

குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு பிரச்சார பயணம்

குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு பிரச்சார பயணம்


UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM

ADDED : ஜூலை 26, 2014 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2014 12:00 AM ADDED : ஜூலை 26, 2014 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன்களிலும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை கலைக்குழுவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்ட சமூக நல பாதுகாப்புத்துறையின் கீழ் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்த கலைக்குழுவின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வருகிறது.

பிரச்சார பயணத்தை துவக்கி வைத்து கலெக்டர் விவேகானந்தன் பேசியதாவது: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்த கலைக்குழுவின் விழிப்புணர்வு பிரச்சார களப்பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த பிரச்சார குழுவினர் நல்லம்பள்ளி, பென்னாகரம் ஆகிய யூனியன்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்று மொரப்பூரிலும், நாளை (27ம் தேதி) அரூரிலும், 28ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டியிலும், பிரச்சார குழுவினர் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் பிரச்சார நாடகங்களின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர் என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கல்யாண சுந்தரம், நன்னடத்தை அலுவலர் சிவகாந்தி, பாதுகாப்பு அலுவலர்கள் சித்தார்த்தன், சரவணா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us