தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றினால் குழந்தைகளை காப்பாற்றலாம்: சுகாதாரத்துறை

சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றினால் குழந்தைகளை காப்பாற்றலாம்: சுகாதாரத்துறை

சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றினால் குழந்தைகளை காப்பாற்றலாம்: சுகாதாரத்துறை


UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM

ADDED : ஜூலை 28, 2014 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM ADDED : ஜூலை 28, 2014 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சுத்தம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றை பின்பற்றினால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதை தடுக்கலாம் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்த, இன்று முதல் ஆக., 8 வரை இரு வாரங்கள் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகை, 120 கோடியை தாண்டி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிறப்பு விகிதம் அதிகரிக்கும் அதேவேளையில், இறப்பு விகிதமும் குறைந்தபாடில்லை. பல்வேறு நவீன மருத்துவ முறைகள் வளர்ந்தாலும், இறப்பு விகிதம் பெருமளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு, சுகாதார துறைக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு, தேசிய அளவில், 1,000க்கு 48, தமிழகத்தில் 1,000க்கு 24 என்ற விகிதத்தில் உள்ளது. வரும், 2017ம் ஆண்டுக்குள் குழந்தைகள் இறப்பு விகிதத்தை, 24 என்ற அளவிலிருந்து, 15 ஆக குறைக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும், வயிற்றுப்போக்கால் இறப்பதாக, சுகாதாரத்துறையின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில், தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். தாய்ப்பால் வழங்குவதில் பிரச்னை ஏற்படும்போதும், சுகாதாரமற்ற முறையில் குழந்தைகளை பராமரிக்கும் போதும், கை கழுவும் முறைகளை பின்பற்றாமை, சுற்றுப்புற சுகாதாரமின்மை, துாய்மையற்ற குடிநீர் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் வயிற்றுப்போக்கல், பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
குழந்தைகள் இறப்பை தடுப்பதில் முன்னோடி மாநிலமாக, தமிழகம் இருந்து வரும் நிலையில், குழந்தைகள் இறப்பை குறைக்க அரசு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், கூறியதாவது: குழந்தைகள் இறப்பை தடுக்க ஜூலை 28 (இன்று) முதல் ஆக., 8 வரை, இரண்டு வாரங்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். வயிற்றுபோக்கு சிகிச்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும். ஓ.ஆர்.எஸ்., மற்றும் மருந்துகள் அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தாய்ப்பால் கொடுப்பதற்கான பயிற்சி, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., வழங்குதல், சுத்தமாக கை கழுவும் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிக்கல்வித் துறை சார்பாக, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கற்பகம் தலைமையில் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால், பிஞ்சுக் குழந்தைகள் இறப்பை மட்டுமல்ல; நாமும் நலமுடன் வாழலாம். இதைத்தான் சுகாதாரத் துறையும் வலியுறுத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us