தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கான இலவச நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கான இலவச நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க கோரிக்கை

பள்ளி மாணவர்களுக்கான இலவச நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க கோரிக்கை


UPDATED : ஆக 01, 2014 12:00 AM

ADDED : ஆக 01, 2014 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2014 12:00 AM ADDED : ஆக 01, 2014 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: விருதுநகர்மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்ட அரசின் 14 வகை இலவச நலத்திட்டங்கள் விரைந்து கிடைக்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறைக்கு ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என ஒதுக்கீடு செய்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வருகிறது. மாணவர்கள் சிரமம் இன்றி கல்வி கற்கவும், பெற்றோர்களின் பொருளாதார பிரச்னையை குறைத்து தொடர்ந்து பிள்ளைகளை கல்வி கற்க அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் இது வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன்படி, பாடபுத்தகம், சீருடை, காலணி, சைக்கிள், லேப்டாப், ஜியாமிண்டரி பாக்ஸ் உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில், பள்ளி திறந்தவுடன் புத்தகம், நோட்டு உடனே வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால், அதற்கு பின் மற்ற பொருட்கள் ஆமை வேகத்தில் மாணவர்களை சென்றடைகிறது.

உரிய காலத்தில் வழங்கப்படுமா?: விருதுநகர் மாவட்டத்தில், இந்த கல்வி ஆண்டில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கிரையான் பென்சில், கலர் பென்சில் வரவில்லை. புத்தக பை வரவில்லை. உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான புத்தக பை மூன்றில் ஒரு பகுதி அளவு கூட வரவில்லை. ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு 150 புத்தக பை வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோலத்தான், காலணி, சீருடை உள்ளிட்டவற்றின் நிலைகளும் உள்ளன. அரசின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதுமாணவர்களை வந்து சேர்வதில் நிலவும் தேக்கம் அவதியை ஏற்படுத்துகிறது. பள்ளி துவங்கும்போது புத்தக பை கொடுத்தால் பெற்றோர் வெளியில் ரூ.100க்கு வாங்கும் செலவு மிச்சமாகும். இதேபோல், ஜியாமண்ட்ரி பாக்ஸ், காலணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகாசி செந்தில் முருகன், "பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச நலத்திட்டங்கள் பள்ளி திறக்கும்போதே கிடைத்தால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பள்ளி திறந்து முழு ஆண்டு தேர்வின் போது அவற்றை வழங்கினால் எந்தப்பயனும் இல்லை. அது, எங்களை போன்ற பெற்றோரின் சுமையை குறைக்க பயன்படாது. எனவே, இப்பொருட்கள் ஒரு ஆண்டின் குறிப்பிட்ட மாதத்திற்குள் வழங்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி கூறுகையில், "தமிழக அரசின் 14 வகை நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன. அது அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படும். அப்பணி விரைவுபடுத்தப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us