தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேவகோட்டை பள்ளியில் மாநில கால்பந்து போட்டி

தேவகோட்டை பள்ளியில் மாநில கால்பந்து போட்டி

தேவகோட்டை பள்ளியில் மாநில கால்பந்து போட்டி


UPDATED : ஆக 01, 2014 12:00 AM

ADDED : ஆக 01, 2014 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2014 12:00 AM ADDED : ஆக 01, 2014 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் மாநில கால்பந்து போட்டி நடந்தது. 24 மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதிப்போட்டியில், சிதம்பரம் ராணி சீதையாச்சி மேல்நிலைப்பள்ளி, மதுரை தூயமரியன்னை பள்ளி மோதியதில் , சிதம்பரம் பள்ளி 2: 0 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பையை பெற்றது. பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் அந்தோணிச்சாமி தலைமையில் நடந்தது.

பள்ளி அதிபர் ஜோசப்கென்னடி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் யாகு வரவேற்றார். சிதம்பரம் பள்ளிக்கு சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கோப்பை வழங்கினார். கஸ்டம்ஸ் எஸ்.பி., நெடுஞ்செழியன், தமிழ்நாடு கால்பந்துக் கழக செயலாளர் பிரின்ஸ்டன், ரோட்டரி துணை ஆளுநர் அமலன் அசோக்,முன்னாள் மைன்ஸ் உதவி இயக்குநர் பழனிவேல், முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் ஜான்குவால்பர்ட் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் பிரபாகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us