தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்றாம் வகுப்பு மாணவனை காயப்படுத்திய தலைமையாசிரியை பணி இடைநீக்கம்

மூன்றாம் வகுப்பு மாணவனை காயப்படுத்திய தலைமையாசிரியை பணி இடைநீக்கம்

மூன்றாம் வகுப்பு மாணவனை காயப்படுத்திய தலைமையாசிரியை பணி இடைநீக்கம்


UPDATED : ஆக 05, 2014 12:00 AM

ADDED : ஆக 05, 2014 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2014 12:00 AM ADDED : ஆக 05, 2014 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, மூன்றாம் வகுப்பு மாணவனை குச்சியால் அடித்து காயப்படுத்திய தலைமையாசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள, வெள்ளனூரை சேர்ந்த பெரியசாமி மகன் கோபி, 8, வெள்ளனூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 1ம் தேதி சரியாக படிக்கவில்லை எனக் கூறி, கோபியை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, 43, குச்சியால் அடித்துள்ளார்.

மாலை வீட்டுக்கு சென்ற கோபி இதுபற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். கோபிக்கு உடலில் காயம் இருந்ததால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கோபியின் தாய் ராஜேஸ்வரி, பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகார்படி, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமை ஆசிரியர் முத்துலட்சுமியை கைது செய்தனர்.

தொடர்ந்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத், முத்துலட்சுமியை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us