எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்!
எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன்!
UPDATED : ஆக 05, 2014 12:00 AM
ADDED : ஆக 05, 2014 02:29 PM
அ நிறம் | அளவு
நுங்கம்பாக்கம்: தேசிய அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகளில், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி சார்பில், 10வது வாஸ்போ விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில் வாலிபால், எறிபந்து போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்தன. சதுரங்கம், மேஜைபந்து போட்டிகள், எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி வளாகத்தில் நடந்தன.
கூடைபந்து போட்டி, தி.நகர் மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. அதில், 33 அணிகள் பங்கேற்றன. சதுரங்கம், வாலிபால், மேஜைபந்து, கூடைபந்து போட்டிகளில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. எறிபந்து போட்டியில், பி.எம்.எஸ்., (பெங்களூரு) அணி சாம்பியன் பட்டம் வென்றது.
