தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்தியக் கூட்டம்

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்தியக் கூட்டம்

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்தியக் கூட்டம்


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆண்டுதோறும், தன் கட்டுபாட்டுக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள், சேர்மன்கள், தாளாளர், செயலாளர்களின் கூட்டங்களை நடத்தி வருகிறது.

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விபரம், நீதிமன்ற புகார்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான கூட்டம், சேலம், பத்மவாணி கல்லூரியில் நடந்தது. தமிழக கல்வியியல் கல்லூரி பல்கலை துணை வேந்தர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லூரிகளின் மேம்பாடு தொடர்பாக, கல்லூரி தாளாளர்கள், செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். 2015-16ம் கல்வி ஆண்டுக்கான கூட்டம் தற்போது நடந்துள்ளது. இக்கூட்டத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டஙகளில் இருந்து, 140 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர், தாளாளர், சேர்மன் கலந்து கொண்டனர். திருவாரூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் புதிதாக, பி.எட், எம்.எட்., பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், 10 கல்லூரிகளில் இணைவுகேட்டு பல்கலையில் விண்ணப்பித்துள்ளன. கடந்தாண்டு, 70 ஆயிரம் பி.எட்.,- எம், எட்., மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனிப்பாடமும், விருப்ப பாடமும் நடத்தப்படவுள்ளது. கல்லூரிகளில், டெட் தேர்வுக்கான பயிற்சி அளிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கை கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பி.எட்., எம்.எட்., படிப்பின் மூலம் தனியார், அரசு துறைகளில் அதிகமான வேலை வாய்ப்பு உள்ளது. தற்போது எம்.பில்.,-பி.எச்.டி பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் தகுதி தேர்வு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. கல்வியியல் கல்லூரி கட்டுவதற்கு சென்னையில், 10 ஏக்கர் நிலமும், 95 கோடி ரூபாயும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us