தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி சத்துணவில் பல்லி கிடந்ததால் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

பள்ளி சத்துணவில் பல்லி கிடந்ததால் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

பள்ளி சத்துணவில் பல்லி கிடந்ததால் மாணவர்கள் முற்றுகை போராட்டம்


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில், பள்ளி சத்துணவில் பல்லி கிடந்ததால், சாப்பாட்டைப் புறக்கணித்து, மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில், 350 மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். தா.சோ.பேட்டையைச் சேர்ந்த பாலு பிள்ளை, பள்ளி சத்துணவு பொறுப்பாளராக உள்ளார்; சமையலராக, எம்.கே.தோட்டம் பாலு, உதவியாளராக, குப்பம்மாள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று, பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கப்பட்டபோது, சாப்பாட்டில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு, மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதை குப்பம்மாளிடம் காண்பித்தபோது, அது பீர்க்கங்காய் அல்லது கத்தரிக்காய் என கூறியுள்ளார். மாணவர்கள், சாப்பாட்டில் கிடந்தது பல்லி என ஊர்ஜிதம் செய்தனர். பின் உடனடியாக சக மாணவர்கள் சாப்பிடுவதைத் தடுத்து நிறுத்தினர். இதனால், சத்துணவு பொறுப்பாளருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள், சத்துணவு சாப்பாட்டைப் புறக்கணித்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதவி தலைமை ஆசிரியர் மனோகரன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, சமைத்த உணவு முழுவதையும் கொட்டி விட்டு, மீண்டும் சமையல் செய்து வழங்கப்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் நேற்று, சத்துணவில், பீர்க்கங்காய், கத்தரிக்காய் பயன்படுத்தவில்லை என்பதும்; சாம்பாரில் கிடந்தது பல்லி தான் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us