தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வட்டார பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள்

வட்டார பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள்

வட்டார பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள்


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வட்டார பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள், சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 19 வயதிற்குட்பட்டோருக்கான 1, 500 மீட்டர் ஓட்டத்தில் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராம்பிரசாத், சித்தார்கோட்டை முகமதீயா மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது வாசிம் குண்டெறிதலில் முதலிடம் பிடித்தனர்.

14 வயதிற்குட்பட்டோருக்கான 600 மீ., ஓட்டத்தில் வேலுமாணிக்கம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சரவணக்குமார், நீளம் தாண்டலில் மாணவர் நவீன், 400 மீ., ஓட்டத்தில் ஆல்வின் மெட்ரிக்., பள்ளி மாணவர் அரவிந்த் முதலிடம் பிடித்தனர்.

17 வயதிற்குட்பட்டோருக்கான 1,500 மீ., ஓட்டத்தில் சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி மாணவர் அகமது முசாபர், 400 மீ., ஓட்டத்தில் வேலுமாணிக்கம் மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார், உயரம் தாண்டுதலில் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக்., பள்ளி மாணவர் பிரிதர்ஷன் முதலிடம் பிடித்தனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் நாச்சியப்பன், ரமேஷ்பாபு, ராமமூர்த்தி, தாமரை கண்ணன், பிரபாகரன், காயத்ரி, சுகிர்தம், மேனகா, சாந்தி, கவுதமி, ஸ்டாலின் கிரேசி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். ஏற்பாடுகளை டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கிழவன்சேதுபதி செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us