தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட் ஆசிரியர் படிப்பிற்கான நேர்காணல் கலந்தாய்வு

பி.எட் ஆசிரியர் படிப்பிற்கான நேர்காணல் கலந்தாய்வு

பி.எட் ஆசிரியர் படிப்பிற்கான நேர்காணல் கலந்தாய்வு


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 01:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 01:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பி.எட் ஆசிரியர் படிப்பிற்கான நேர்காணல் கலந்தாய்வு சேலத்தில் நடந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவுறுத்தலின் பெயரில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு தமிழகத்தில், சென்னையில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை வளாகம், மதுரையில், செயிண்ட் ஜஸ்டின்ஸ் கல்லூரி, கோவையில், அரசு மகளிர் கல்வியல் கல்லூரியிலும், சேலம், ஸ்ரீ சாரதா கல்வியல் கல்லூரி என, நான்கு இடங்களில் நேற்று கலந்தாய்வு நடந்தது. சேலம், சாரதா கல்வியல் கல்லூரி(தன்னாட்சி)யில் பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு , 2,155 இடங்களுக்கான கலதாய்வு நடந்தது. இதற்கான விண்ணப்பம், கடந்த ஜூலை மாதம், 1ம் தேதி முதல், 31ம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விநியேகம் செய்தனர். அதற்கான முதல் கட்ட பி.எட்., சிறப்பு பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான கலந்தாய்வில், முன்னால் ராணுவத்தினரின் வாரிசுகள் மாற்றுத்திரனாளிகள், பழங்குடியின மாணவ, மாணவியர் உட்பட, 20 பேர், தங்களுக்கு விருப்பமான கல்வியியல் கல்லூரிகளை தெரிவு செய்தனர்.

இன்று, முற்பகல் வணிகவியல், கணிப்பொறி அறிவியல் பொருளியல், புவியியல், வரலாறு, மனை அறிவியல, தமிழ் ஆகிய பாடங்களுக்கும் பிற்பகல் ஆங்கிலம், பாடதிற்கான மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.

ஆகஸ்டு, 8ம் தேதி முற்பகல் இயற்பியல், வேதியியல், பாடத்திற்கும் பிற்பகல் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான, கலந்தாய்வும், ஆகஸ்டு 9ம் தேதி அன்று காலை கணிதவியல் பாட மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது, மேலும் விபரங்களுக்கு www.tnteu.in என்ற வலைதளத்தையும் அணுகவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us