தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"நேரத்தை தவறாமல் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறுவது உறுதி"

"நேரத்தை தவறாமல் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறுவது உறுதி"

"நேரத்தை தவறாமல் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறுவது உறுதி"


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: "மாணவர்கள், நேரத்தை தவறாமல் கடைபிடித்தால் வாழ்வில் முன்னேறுவது உறுதி" என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அறிவுறுத்தினார்.

பல்லடம் புரபசனல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது. புரபசனல் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது: மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாதிப்பதற்கு மொழி அறிவு மிகவும் அவசியம். அதற்காக, தாய் மொழியை மட்டும் கற்றுக்கொள்ளக்கூடாது. உலகில் அதிகளவு பயன்பாட்டில் உள்ள ஆங்கிலத்தில் புலமை பெற வேண்டும். அப்போதுதான் தமிழன் புகழ் உலகெங்கும் பரவும்.

ஒரு கருத்து கணப்பில், உலகிலேயே சிறந்த மாணவர்கள் சீனர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக இருப்பது நம் இந்திய மாணவர்கள். இதற்கு உதாரணம், இந்தியர்கள் வெளிநாட்டு ஐ.டி., கம்பெனிகளில் அதிக அளவில் வேலை செய்கின்றனர்.
ஆனால், அந்த அளவு சீனர்களின் ஆதிக்கம் வெளிநாட்டு ஐ.டி., கம்பெனிகளில் இல்லை. ஏன் என்றால், சீனர்களுக்கு ஆங்கிலப்புலமை இல்லை என்பதையே காட்டுகிறது.

மொழியியல் வல்லுனர்கள் இந்தியர்கள். மாணவர்கள் அனைத்து மொழியையும் நன்கு கற்றுக்கொண்டு அனுபவங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், நேரம் என்பது, அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நேரத்தை மதிக்க வேண்டும். நேரத்தின் அருமை பல இடங்களில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்றுவது. ரயிலை சரியான நேரத்தில் பிடிக்கச் செல்வது. காதலன், காதலிக்காக காத்திருப்பது என பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. நேரத்தை சரியாக கடைபிடித்து, மதித்து நடந்தால், மாணவர்கள் வாழ்வில் முன்னேறுவது உறுதி. இவ்வாறு லேனா தமிழ்வாணன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us