தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான மாநில கபடி போட்டி

அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான மாநில கபடி போட்டி

அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான மாநில கபடி போட்டி


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநில அளவில் அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான கபடி போட்டி ஈச்சனாரி கற்பகம் பாலிடெக்னிக் கல்லுாரியில் துவங்கியது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கோவை மண்டல பகுதிகளை சேர்ந்த 23 பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் போட்டியில் பங்கேற்றன. கற்பகம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் வசந்தகுமார் போட்டியை துவக்கினார்.

முதல் போட்டியில், சூலுார் ஆர்.வி.எஸ்.,பாலிடெக்னிக் கல்லுாரி 44-20 புள்ளி கணக்கில் நீலகிரி என்.பி.ஏ., கல்லுாரியையும்; இரண்டாவது போட்டியில், பழனியாண்டவர் கல்லுாரி 50-33 புள்ளி கணக்கில் கற்பகம் பாலிடெக்னிக் கல்லுாரியையும்; மூன்றாவது போட்டியில் பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.வி.,கல்லுாரி 25-21 புள்ளி கணக்கில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன.

நான்காவது போட்டியில், ஸ்ரீநாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரி 43-22 மதுக்கரை கல்லுாரியையும்; ஐந்தாவது போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி 48-12 புள்ளி கணக்கில் ஒத்தக்கால் மண்டபம் ஜீவாஸ் கல்லுாரியையும்; ஆறாவது போட்டியில், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி 26-18 புள்ளி கணக்கில் ஒத்தக்கால் மண்டபம் கிறிஸ்துஅரசர் பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன.

ஏழாவது போட்டியில், சிக்கனுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி 39-19 புள்ளி கணக்கில் சரவணம்பட்டி சந்திரா பாலிடெக்னிக் கல்லுாரியையும்; எட்டாவது போட்டியில், மேட்டுப்பாளையம் என்.எல்., பாலிடெக்னிக் கல்லுாரி 45-42 புள்ளி கணக்கில் உடுமலை ஆர்.எம்.பாலிடெக்னிக் கல்லுாரியையும்; ஒன்பதாவது போட்டியில், அத்தபாளையம் ரங்கநாதன் பாலிடெக்னிக் கல்லுாரி 31-21 புள்ளி கணக்கில் பொள்ளாச்சி கே.எம்.வி., பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன. போட்டிகள் இன்றும் தொடர்ந்து நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us