பள்ளி மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து போலீசார் ஆலோசனை
பள்ளி மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து போலீசார் ஆலோசனை
UPDATED : ஆக 08, 2014 12:00 AM
ADDED : ஆக 08, 2014 11:49 AM
கும்மிடிப்பூண்டி: பள்ளி மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிப்பது குறித்து, போலீசார் ஆலோசனை வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவியருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி பெண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், இன்ஸ்பெக்டர் கனகாபாய் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் வனிதாராணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாணவியர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதை எதிர்கொள்வது, சமாளிப்பது, பிரச்னையில் இருந்து விடுபடுவது குறித்து இன்ஸ்பெக்டர் கனகாபாய் ஆலோசனை வழங்கினார்.
மேலும் அவர் கூறுகையில், "மகளிர் காவல் நிலையம் சென்று நேரடியாக பிரச்னைகளை தெரிவிக்க தயக்கம் காட்டும் மாணவியர், அவர்களின் பிரச்னைகளை புகாராக எழுதி, பள்ளி மற்றும் மகளிர் காவல் நிலையம் முன் வைக்கப்பட உள்ள புகார் பெட்டியில் போடவும். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இம்மாதிரியான விழிப்புணர்வு கூட்டம், அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படும் என மகளிர் போலீசார் தெரிவித்தனர்.
