தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம்

பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம்

பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம்


UPDATED : ஆக 08, 2014 12:00 AM

ADDED : ஆக 08, 2014 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2014 12:00 AM ADDED : ஆக 08, 2014 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, அருள்மிகு சண்டிகேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருமுருகன்பூண்டி ரோட்டரி ஆகியன இணைந்து, பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாமை நடத்துகின்றன.

பூண்டி, எம்.ஜி.ஆர்., நகரிலுள்ள பால் ஹாரீஸ் ரோட்டரி ஹாலில் நடக்கும் பயிற்சி முகாமில், 25 வயது முதலான பெண்கள் பங்கேற்கலாம். கம்ப்யூட்டர், தையல், ஹேண்ட் எம்ப்ராய்டரி ஆகிய மூன்று துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். கம்ப்யூட்டர் மற்றும் தையலுக்கு ஆறு மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குபின், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத்தக்க சான்றிதழ் வழங்கப்படும்.

நிர்வாகிகள் கூறியதாவது: கம்ப்யூட்டர் பயிற்சிக்கு மட்டும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பிற பயிற்சிகளுக்கு, கல்வித்தகுதி தேவையில்லை. தினமும் காலை 10.00 முதல் 12.30 மணி வரை; மதியம் 1.30 முதல் மாலை 4.30 மணி வரை, இரு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆண்களுக்கு எலக்ட்ரிக்கல், பிளம்பிங் மற்றும் பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சிகளும், விரைவில் அளிக்கப்பட உள்ளன. இலவச தொழிற்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பெண்கள், 98940 42145, 85858 91857 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us