தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி


UPDATED : ஆக 09, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 04:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கட்டணம் நிர்ணயிக்க, குழு அமைக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையை சேர்ந்த சாமிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண நிர்ணயம் தொடர்பாக, ஒரு குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜராகி, "கட்டணம் நிர்ணயம் செய்ய, ஏற்கனவே குழு நியமிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, அந்தக் குழு முன் எந்த புகாரும் நிலுவையில் இல்லை" என்றார்.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: பொது நல மனு என்ற பெயரில், பத்திரிகை செய்தி அடிப்படையில், இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் மட்டுமே, பொதுநல மனு தாக்கல் செய்வது, விசாரணைக்கு உகந்தது அல்ல.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கட்டண நிர்ணய குழு நியமிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த மனுவை அனுமதிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us