தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விடுதி காப்பாளர்களை சிறைபிடித்த மாணவர்கள்

விடுதி காப்பாளர்களை சிறைபிடித்த மாணவர்கள்

விடுதி காப்பாளர்களை சிறைபிடித்த மாணவர்கள்


UPDATED : ஆக 09, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை விடுதி காப்பாளர்களை மாணவர்கள் சிறைபிடித்தனர்.

இங்குள்ள வ.உ.சி., விடுதியில் உணவு மற்றும் தண்ணீர் வசதி இல்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். நேற்று மதியம் விடுதி காப்பாளர்கள் நாகரத்தினம், அரவிந்த் ஆகியோரை விடுதிக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறை வைத்தனர்.

போலீசார் மற்றும் பல்கலை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாணவர்கள் கூறுகையில், "இரண்டு மாதங்களாக விடுதி செயல்படவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை. பல்கலை நிர்வாகம் இதுகுறித்து பேச்சுவார்த்தைக்கு வருவது இல்லை" என்றனர்.

பல்கலை தரப்பில் கூறியதாவது: பல்கலையில் பி.எச்.டி., படிப்பு முடித்தும் பலர் விதிமீறி விடுதிகளில் தங்கி வருகின்றனர். கல்வி உதவித்தொகை பெறும் குறிப்பிட்ட மாணவர்கள், மாத உணவுக் கட்டணம் செலுத்துவதில்லை. இருந்தும் பல்கலை சார்பில் விலைக்கு வாங்கி அந்த விடுதியில் தண்ணீர் வசதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கட்டணம் செலுத்தாததால் விடுதியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சிலர் தூண்டுதலின் பேரில் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் பல்கலைக்கு எதிராக இதுபோன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்" என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us