தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வயது வரம்பு குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க நோட்டீஸ்

வயது வரம்பு குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க நோட்டீஸ்

வயது வரம்பு குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க நோட்டீஸ்


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொறியியல் கல்லூரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு குறித்து 30 நாட்களுக்குள் உயர்கல்வித் துறை செயலரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தொழில்நுட்ப கல்வி எஸ்.சி. எஸ்.டி. நல்வாழ்வு சங்க தலைவர் கோபி, சென்னையில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் விவரம்: அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டுள்ளது. அதில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் அமைப்பு சட்டத்தின்படியும் இயற்கை நியதியின் படியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை அமலில் உள்ள நிலையில் டி.ஆர்.பி.யின் அறிவிப்பு பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர முன்பு இருந்ததுபோல் வயது வரம்பை 57ஆக தளர்த்தி மறு அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 30 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, உயர்கல்வித் துறை செயலர் ஹேமந்த்குமார் சின்கா மற்றும் டி.ஆர்.பி. தலைவர் விபு நய்யார் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் உதவி இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us