தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லேப்டாப் தராததை கண்டித்து மாணவிகள் மறியல் மற்றும் முற்றுகை

லேப்டாப் தராததை கண்டித்து மாணவிகள் மறியல் மற்றும் முற்றுகை

லேப்டாப் தராததை கண்டித்து மாணவிகள் மறியல் மற்றும் முற்றுகை


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் லேப்டாப் தராததை கண்டித்து மாணவிகள் மறியல் மற்றும் பள்ளி முற்றுகையில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 373 மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவிகள் 46 பேர் மற்றும் வரலாறு பிரிவு மாணவிகள் 39 பேர் உள்ளிட்ட 85 மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க முடியாது என அறிவித்து, மற்ற 288 மாணவிகளுக்கு மட்டும் லேப்டாப் வழங்கினர்.

85 மாணவிகள் உட்பட அனைத்து மாணவிகளின் மார்க் பட்டியலில் இலவச லேப்டாப் வழங்கியதாக சீல் வைத்து வினியோகம் செய்தனர். லேப் டாப் கிடைக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பின், மாணவிகள் பள்ளி வாசலில் முற்றுகையில் ஈடுபட்டனர்.

தாசில்தார் கோவிந்தன், மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர், 15 நாட்களில் மாவட்ட முதன்மை அலுவலரிடம் தெரிவித்து மற்ற மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.
தலைமை ஆசிரியை அருட்சகோதரி அடைக்கலமேரி கூறும்போது, சுய நிதி பாட பிரிவுகளில் பயிலும் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசிடம் ஒப்புதல் பெற்று வழங்கப்படும் என தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us