தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கம்பன் கலை அறிவியல் கல்லுாரி அணிகள் வெற்றி

கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கம்பன் கலை அறிவியல் கல்லுாரி அணிகள் வெற்றி

கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கம்பன் கலை அறிவியல் கல்லுாரி அணிகள் வெற்றி


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கம்பன் கலை அறிவியல் கல்லுாரி அணிகள் வெற்றி பெற்றன.

பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லுாரிகளுக்கான "பி" மண்டல கிரிக்கெட் போட்டி பாரதியார் பல்கலையில் துவங்கின. இதில் 19 கல்லுாரிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் கே.எஸ்.ஜி., கல்லுாரி 50 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் டெர்ப் கல்லுாரியை வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்செய்த கே.எஸ்.ஜி., கல்லுாரி 25 ஓவர்களில் ஏழு விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கே.எஸ்.ஜி.  கல்லுாரியின் ராஜேஷ்கண்ணா 53, பிரதீப் 22, வினோத் 17, சந்திரசேகர் 16 ரன்களும் எடுத்தனர். டெர்ப் கல்லுாரி செல்வகுமார் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

அடுத்து பேட் செய்த டெர்ப் கல்லுாரி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. டெர்ப் அணியின் சுரேந்தர் 22, செல்வம் 19 ரன்களும் எடுத்தனர். கே.எஸ்.ஜி., கல்லுாரியின் கருப்புசாமி நான்கு, வினோத் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
மற்றொரு போட்டியில், கம்பன் கலை அறிவியல் கல்லுாரி 64 ரன்கள் வித்தியாசத்தில், பிஷப் அம்புரோஸ் கல்லுாரியை வென்றது.
முதலில் பேட்செய்த கம்பன் கல்லுாரி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. கம்பன் கல்லுாரியின் சதீஷ் 27 ரன்களும், கார்த்திக் 13 ரன்களும் எடுத்தனர். அம்புரோஸ் கல்லுாரியின் அபில் 3, டேனியல் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

அடுத்து பேட் செய்த அம்பு ரோஸ் கல்லுாரி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அம்புரோஸ் கல்லுாரியின் தினேஷ் 18, சிவா 14 ரன்கள் எடுத்தனர். கம்பன் கல்லுாரியின் சவுந்தராஜ் ஐந்து, மதிவானன், கேசவன் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us