நவபாரத் தேசிய பள்ளியில் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா
நவபாரத் தேசிய பள்ளியில் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா
UPDATED : ஆக 13, 2014 12:00 AM
ADDED : ஆக 13, 2014 12:45 PM
அன்னுார்: அன்னுார் நவபாரத் தேசிய பள்ளியில் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் தருண் ஆதித்யா, அஷ்வத் ராம், நவீன், தீபக், நந்தனா, சுஷாந்தினி, லோகநாயகி, இலக்கியா, ஜனனி ஆகியோர் தனித்தனி பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
முன்னதாக, மாணவர்களின் அணிவகுப்பு, கராத்தே, யோகா செய்து காண்பிக்கப்பட்டது. கனரா வங்கி கோவை மண்டல துணை பொது மேலாளர் சுரேஷ்குமார் பேசுகையில், “விளையாடுவதால் குறிப்பிட்ட செயலில் மனதின் முழு ஈடுபாடும், உடல் உறுதியும் உண்டாகிறது. விளையாட்டில் சாதிப்பவர்கள், கல்வியிலும் எளிதில் சாதிக்கலாம்" என்றார்.
பள்ளி அணிகளில், விக்ராந்த் அணி, 560 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாக இயக்குனர், தாளாளர்கள் பரிசும், சான்றிதழ்களும் வழங்கினர்.
