பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டி
பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய விளையாட்டு போட்டி
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 01:08 PM
பொங்கலூர்: பல்லடம், பொங்கலூர் ஒன்றியங்களுக்குட்பட்ட குறுமைய விளையாட்டு போட்டி, பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவு கபடி போட்டியில், பல்லடம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும்; 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இரண்டாம் இடத்தையும் பெற்றது.
பல்லடம் அமிர்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றது. 19 வயதுக்குட்பட்ட பிரிவில், சாமிகவுண்டன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில், அருள்புரம் அரசு உயர்நிலை பள்ளியும், இரண்டாம் இடத்தை பெற்றன.
பெண்கள் கோ கோ போட்டியில் 14 மற்றும் 17 வயதுக்குட்ட பிரிவில், வளையபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியும்; 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பல்லடம் புளுபேர்ட் மெட்ரிக் பள்ளியும் முதலிடம் பெற்றன.14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடம்பெற்றன.
