தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிணறு அச்சத்தால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அஞ்சும் பெற்றோர்

கிணறு அச்சத்தால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அஞ்சும் பெற்றோர்

கிணறு அச்சத்தால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அஞ்சும் பெற்றோர்


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 02:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 02:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: கோட்டூர் நகரில் குழந்தைகள் நல மையக் கட்டடத்தின் அருகில் உள்ள, கிணற்றுக்கு போடப்பட்ட வலை, போதிய பாதுகாப்பில்லாத காரணத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சி 1வது வார்டு பகுதியில் உள்ள இந்திரா நகரில் 150க்கும் அதிகமான குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள கிணற்றுக்கு போடப்பட்ட வலை போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இன்றி உள்ளது.

இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மையத்தில் முன்பருவ கல்வியினை கற்று வருகின்றனர். இந்த குழந்தைகள் மையத்தின் முன்புறம் அமைத்துள்ள கிணறுக்கு போடப்பட்ட வலை திறந்து கிடக்கிறது.

போதிய பாதுகாப்பு வசதியில்லாத இந்த மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். குழந்தைகள் மையத்தின் அருகில் உள்ள கிணற்றுக்கு போடப்பட்ட இரும்பு வலை திறந்து கிடக்கிறது. அவற்றை சரிசெய்ய அரசுமுன்வர வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us