இறகுப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
இறகுப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சாம்பியன்
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 01:58 PM
கோவை: கோவை மண்டல அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவியருக்கான இறகுப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி, சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை மண்டல பாலிடெக்னிக் கல்லுாரிகள் கழகம் சார்பில் மாணவியருக்கான டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போட்டிகள் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தன.
டேபிள் டென்னிஸ் அரைஇறுதி போட்டியில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி 4-0 செட் கணக்கில் பி.எஸ்.ஜி.,கல்லுாரியையும்; மற்றொரு அரைஇறுதியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி 3-0 செட் கணக்கில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன. இறுதி போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, 3-2 என்ற செட் கணக்கில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியை வென்று, முதலிடம் பிடித்தது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி, 3-2 செட் கணக்கில் பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லுாரியை வென்றது.
இறகுப்பந்து: ஒற்றையர் இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லுாரி விகாஷினி 21-4, 21-5 புள்ளி கணக்கில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ரூபினியை வென்றார்.
இரட்டையர் போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி விகாஷினி-பிரதிபா ஜோடி 21-6, 21-5 புள்ளி கணக்கில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ரூபினி, சோனா ஜோடியை வென்றனர். பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ருத்ரமூர்த்தி பரிசளித்தார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் முரளி நன்றி கூறினார்.
