தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரிகளுக்கு இடையேயான இரு நாட்கள் விளையாட்டுப் போட்டி

கல்லுாரிகளுக்கு இடையேயான இரு நாட்கள் விளையாட்டுப் போட்டி

கல்லுாரிகளுக்கு இடையேயான இரு நாட்கள் விளையாட்டுப் போட்டி


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை குமரகுரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையேயான இரு நாட்கள் விளையாட்டுப் போட்டி நாளை(ஆகஸ்ட் 15) துவங்குகிறது.

கல்லுாரி சார்பில், 11வது கேசிடி., ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் 2014, நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி), கல்லுாரி வளாகத்தில் நடத்தப்படுகின்றன. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்கின்றன.

ஆண்களுக்கு, கபடி, பால் பாட்மிண்டன், கால்பந்து,ஹேண்ட்பால், பெண்களுக்கு, த்ரோ பால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இருபாலருக்கும், பாட்மிண்டன், கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகளாக ரொக்கம், சுழற்கோப்பை, சான்றிதழ் என, 60 ஆயிரம் மதிப்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு: 98944 16859.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us