பள்ளி வளாகத்தை ஓட்டியுள்ள குப்பை தொட்டியால் மாணவர்கள் அவதி
பள்ளி வளாகத்தை ஓட்டியுள்ள குப்பை தொட்டியால் மாணவர்கள் அவதி
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 01:16 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: பள்ளி வளாகத்தை ஓட்டியுள்ள குப்பை தொட்டியால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர், நஞ்சப்பா பள்ளி வளாகம் முன், மாநகராட்சி குப்பை தொட்டி உள்ளது. ஒருசில நாட்கள், அங்குள்ள குப்பை அகற்றப்படாமல், அப்பகுதியே துர்நாற்றம் வீசுவதுண்டு. பள்ளி வளாகத்தை ஓட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால், மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் குப்பை தொட்டியை அகற்றும்படி, பள்ளி நிர்வாகம் தரப்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
