நீச்சல் போட்டியில் அலங்காநல்லுார் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி
நீச்சல் போட்டியில் அலங்காநல்லுார் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 02:08 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்திய மாவட்ட நீச்சல் போட்டியில், அலங்காநல்லுார் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் பெரியவர், சுரேஷ், பிரபாகரன், அருண்பாண்டி முதலிடம் பெற்றனர். 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், ப்ரீஸ்டைல் பிரிவுகளில் பெரியவர் இரண்டாமிடம், 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் ராம்கி மூன்றாமிடம் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களை, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தலைமையாசிரியை பிராக்ரன்ஸ் மேரி, உடற்கல்வி ஆசிரியர் காட்வின் பாராட்டினர்.
