தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி

கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சி


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்களுக்கு, மதுரை ஐகோர்ட் கிளையில் சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

ஐகோர்ட், சமரசத் தீர்வு மையம், இலவச சட்ட உதவி மையங்களில் விசாரணை நடைமுறைகளை பார்வையிட்டனர். பெண் வக்கீல்கள் சங்கத்தில் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தலைவி நிஷா பானு தலைமை வகித்தார்.

சமரசத் தீர்வாளர் வக்கீல் சாமிதுரை பேசியதாவது: தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதிப்பு; வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை; இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை கண்டதும், அரசு பஸ்கள் நிற்காமல் செல்லக்கூடாது; அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உட்பட பல்வேறு பொதுநல வழக்குகளில், ஐகோர்ட் கிளை முக்கியத்துவமான தீர்ப்புகளை அளித்துள்ளது.

குடும்பப் பிரச்னை, விவாகரத்து, வரதட்சணை வழக்குகளுக்கு சமரசத் தீர்வு மையம், இலவச சட்ட உதவி மையம், ஆலோசனை மையம் மூலம் விரைந்து தீர்வு காணலாம். பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.

குழந்தைகளின் உரிமைகள் பற்றி பெண் வக்கீல்கள் சங்க துணைத் தலைவி ஜெயா இந்திரா படேல் பேசினார். சிறந்த கேள்விகள் எழுப்பிய மாணவர்களை பாராட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டது. வக்கீல் கலையரசி பாரதி, பள்ளி ஆசிரியைகள் லதா, சந்திரகலா, உமா மகேஸ்வரி, தேவிகா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us