தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரிக்கெட் போட்டியில் சசூரி கலை அறிவியல் கல்லுாரி வெற்றி

கிரிக்கெட் போட்டியில் சசூரி கலை அறிவியல் கல்லுாரி வெற்றி

கிரிக்கெட் போட்டியில் சசூரி கலை அறிவியல் கல்லுாரி வெற்றி


UPDATED : ஆக 16, 2014 12:00 AM

ADDED : ஆக 16, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2014 12:00 AM ADDED : ஆக 16, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், சசூரி கலை அறிவியல் கல்லுாரி வெற்றி பெற்றது.

பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், பி மண்டல 19 கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி, பல்கலையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில், சசூரி கலை அறிவியல் கல்லுாரி, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரியை வென்றது.

டாஸ் வென்று, முதலில் பேட் செய்த சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லுாரி, 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்கள் இழப்புக்கு, 88 ரன்கள் மட்டும் எடுத்தது. சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கல்லுாரி பெசிதரன் 19 ரன்கள் எடுத்தார். சசூரி கல்லுாரி பிரவீன்குமார் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

அடுத்து பேட் செய்த, சசூரி கலை அறிவியல் கல்லுாரி 10.5 ஓவர்களில் விக்கெட்கள் இழப்பின்றி, 89 ரன்கள் எளிதில் எடுத்து வெற்றி பெற்றது. சசூரி கிரிக்கெட் கிளப்பின் விக்னேஷ் வருண் 44 ரன்களும், சதீஷ்குமார் 10 ரன்களும் எடுத்தனர். மற்றொரு போட்டியில் எல்.என்.வி., கல்லுாரி போட்டிக்கு வராததால், எதிரணி கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us