தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் சாம்பியனான பள்ளிகள்

கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் சாம்பியனான பள்ளிகள்

கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் சாம்பியனான பள்ளிகள்


UPDATED : ஆக 16, 2014 12:00 AM

ADDED : ஆக 16, 2014 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2014 12:00 AM ADDED : ஆக 16, 2014 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை கல்வி மாவட்ட கோவை-ஆ குறுமைய 44 பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியும், மாணவியருக்கான பிரிவில் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றன. இந்த தடகள போட்டிகள், புனித மரியன்னை மேல்நிலை பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் நடந்தன.

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கீழ் கோவை கல்வி மாவட்டத்தில் 380 பள்ளிகளை எட்டு குறுமையங்களாக பிரித்து, 14, 17, 19 வயதுக்குட்பட்ட முறையே ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவு மாணவ, மாணவியர் பல்வேறு பிரிவு தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.

மாணவர் பிரிவு சாம்பியன்கள் 14 வயது ஜூனியர் பிரிவில், பி.ஆர்.சித்தாநாயுடு நினைவு மெட்ரிக் பள்ளி சங்ராம் நாயக் 13 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி தினேஷ் 13 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர்சீனியர் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி விவேகானந்தன் 15 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பள்ளி சாம்பியன்கள்

14 வயது ஜூனியர் பிரிவில், பி.ஆர்.,சித்தாநாயுடு நினைவு மெட்ரிக் பள்ளி 35 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி 43 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன. கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 56 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

மாணவியர் பிரிவு சாம்பியன்கள்: 14 வயது ஜூனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி தெரசா கிரேஷ் மிகேல் 15 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி மிருதுலா 13 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி லோகமுத்ரா 20 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பள்ளி சாம்பியன்கள்: 14 வயது ஜூனியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி 34 புள்ளிகளுடனும், 17 வயது சீனியர் பிரிவில், அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி 27 புள்ளிகளுடனும், 19 வயது சூப்பர் சீனியர் பிரிவில், செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி 32 புள்ளிகளுடனும் சாம்பியன் பட்டம் வென்றன. அல்வேர்னியா மெட்ரிக் பள்ளி 48 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us