ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.1.53 கோடி
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.1.53 கோடி
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 01:18 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்கட்ட நிதியாக ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,257 துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சேதமடைந்த வகுப்பறைகள், கழிப்பறைகள், வாடகை கட்டட பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்வது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆய்வு செய்தது.
இதன்படி ராமேஸ்வரம் காட்டுப்பிள்ளையார்கோவில், இருமேனி, என்மனங்கொண்டான், நொச்சியூரணி, ஆர்.எஸ்.மங்கலம் (மேற்கு), பாரனூர், பாசிபட்டினம், கொட்டகுடி, இல்லிமுள்ளி, செல்வநாயகபுரம், மருதகம், பொன்னகரம் துவக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தலா ரூ.5.50 லட்சம், தேவரேந்தல், மேலாய்க்குடி, பரளை, மேற்கு கொட்டகுடி துவக்கப்பள்ளிகளில் கழிப்பறை கட்ட தலா 1.54 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
196 பள்ளிகளில் கைப்பிடியுடன் கூடிய சாய்தளம் அமைக்க ரூ.31.15 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இப்பணிகளுக்கான காசோலைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் வழங்கினர்.
